அவுஸ்திரேலிய வீரர்கள் சென்ற பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்!!

கவுகாத்தியில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தின் போது யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது.

அசாமின் கவுகாத்தியில் உள்ள பார்சபரா மைதானத்தில் 2வது போட்டி நடந்தது.

இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்து வீரர்கள் ஹோட்டலுக்கு திரும்பிய போதே திடீரென பேருந்து ஜன்னல் மீது கல்வீசப்பட்டுள்ளது.

இதில் கண்ணாடி உடைந்ததாகவும், வீரர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.