இன்ஸ்டாகிராம் பயனாளர்களுக்கு இனிப்பான செய்தி!

இன்ஸ்டாகிராம் செயலியில் தற்போது பல அம்சங்கள் வர உள்ளது. இதனால் பேஸ்புக்குக்கு பின்னைடைவு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்மையில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இன்ஸ்டாகிராம் செயலியில் வொய்ஸ் (voice) மற்றும் வீடியோ அழைப்பு (call) அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையிலான தகவல்கள் ஆண்ட்ராய்டு ஆல்ஃபா மூலம் தெரியவந்திருக்கிறது.

அழைப்பு ஐகான் மட்டுமின்றி அழைப்புகள் வீடியோ அழைப்பு சார்ந்த விவரங்களும் இந்த செயலியில் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னதாக பிரைவேட் சாட் விண்டோவில் நேவிகேஷன் பாரில் வீடியோ அழைப்பு அம்சம் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இன்ஸ்டாகிராம் இருக்கும் நிலையில் நண்பர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள செயலியை விட்டு வெளியேற வேண்டிய நிலை இனி இருக்காத என கூறப்படுகிறது.