இலங்கையை அணியை மீட்டெடுப்பாரா அரவிந்த் டி சில்வா!!

இலங்கை கிரிக்கெட் அணியை மீட்டெடுப்பதற்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான அரவிந்த டி சில்வாவின் உதவியை பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முயற்சிகளை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் அரவிந்த டி சில்வாவை சர்வதேச கிரிக்கெட் பிரதானியாக நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த டி சில்வாவிற்கு மேலதிகமாக பிரண்டன் குறுப்பு, கிரகம் லேபோய், மஹேல ஜயவர்தன ஆகியவர்களின் உதவிகளையும் இதற்காக பெற்றுகொள்ள தயாராகி வருவதாக இலங்கை கிரிக்கெட் அணி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இதற்கு முன்னரும் அரவிந்தடி சில்வா பல முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.