இலங்கை அணியில் தற்போது சேர்க்கப்பட்டவர்கள் இவர்கள் தான்!!

இலங்கை அணியில் துஷ்மந்தா சமீரா, லஹிரு காமேஜ் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நிறைவடைந்த இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரில்  2-0 என முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில் 3 வது மற்றும் கடைசி போட்டி சனிக்கிழமை பல்லேகெலேயில் ஆரம்பமாகிறது.

இலங்கை அணியின் ஹெராத், பிரதீப் காயம் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர்.

இதனால் 3 வது போட்டியில் இருந்து ஹெராத், பிரதீப் மற்றும் குணதிலகா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குப் பதிலாக துஷ்மந்தா சமீரா, லஹிரு காமேஜ் ஆகியோர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.