ஈரான், நைஜர் அணிகள் வெற்றி

இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6 ஆம் திகதி தொடங்கியது.

நேற்றைய 2 வது நாளில் நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

கோவாவில் 5 மணிக்கு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜெர்மனி – கோஸ்டாரிகா அணிகள் மோதின. இப்போட்டியில் ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கொச்சியில் 5 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் – ஸ்பெயின் அணிகள் மோதின.

இப்போட்டியில் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

கோவாவில் 8 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈரான் – கினியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.

இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 59 வது நிமிடத்தில் ஈரானின் அலாஹியர் சையத் முதல் கொல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை கொடுத்தார்.

கொச்சியில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள வடகொரியா – நைஜர் அணிகள் மோதின.

இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற 2 வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 59 வது நிமிடத்தில் நைஜரின் சலிம் கொல் அடித்தார்.

அதன்பின்னர் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இதனால் நைஜர் 1-0 என வெற்றி பெற்றது.