உலக தடகள போட்டி: தங்கப் பதக்கத்தை தனதாக்கினார் அமெரிக்க வீராங்கனை!!

உலக தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை முதலிடம் பிடித்துள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி போவி 10.85 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

ஐவரிகோஸ்ட் வீராங்கனை மேரி ஜோசி தாலு 10.86 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

நெதர்லாந்து வீராங்கனை டாபைன் ஸ்சிப்பெர்ஸ் 10.96 வினாடியில் இலக்கை கடந்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.