ஊன்று கோல் இனி வேண்டாம்: வந்துவிட்டது புதிய காலணி!

வயதானவர்கள் நடக்கும் போது தவறி விழுந்து விடுவார்கள். அவர்கள் தம்மைப் பாதுகாக்கவே ஊன்றுகோல் பயன்படுத்துவார்கள்.

ஆனால் இனி ஊன்றுகோல் தேவையில்லை என்ற நிலைமை மாறிவிட்டது. ஊன்றுகோலிற்குப் பதிலாக புதிதாக காலணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

ஊன்று கோலிற்கு பதிலாக குறித்த காலணிகளை பயன்படுத்துவதன் ஊடாக வயதானவர்கள் தடுமாறமல் நடக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலணிகளின் அடிப்பகுதியில் பற்சக்கரங்கள் போன்ற அமைப்பு காணப்படுகிறது.

அவர்கள் தடுமாறும் தருணத்தில் தானாகவே உடல் சமநிலையை இந்த காலணி ஏற்படுத்தி தந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இனி வயதானவர்கள் ஊன்றுகோலிற்கு பை பை சொல்லலாம்.