ஒரேயொரு பட்டனை அழுத்தினால் போதும்: வலியின்றி உயிரைப் பிரிக்கும் தற்கொலை இயந்திரம்!!

வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடும் தற்கொலை இயந்திரம் ஒன்றை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் மருத்துவர் பிலிப் நிட்ச்கே அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஒரே ஒரு பட்டனை அழுத்தினால் போதும். வலி இல்லாமல் உயிர் பிரிந்துவிடுமாம். இந்த இயந்திரத்தினை நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு பொறியியலாளர் வடிவமைத்துள்ளார்.

இந்த தற்கொலை இயந்திரத்திற்கு “தி சார்கோ கேப்சியூல்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதலில் நம் மன நிலையை சோதிக்கும் விதமான சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவெடுத்த ஒருவர் குறித்த இயந்திரத்தில் அமர்ந்துகொண்டு, ஒரு பட்டனை அழுத்தினால் போதும்..

அதில், நீர்ம நிலையிலுள்ள நைட்ரஜன் வாயு ஒக்ஸிஜன் அளவை குறைத்து சில நிமிடங்களில் வலி இல்லாமல் மரணத்தை தழுவச் செய்துவிடுமாம்.

இதுகுறித்து மருத்துவர் பிலிப் கூறியதாவது;

குறித்த இயந்திரத்தில் தடை செய்யப்பட்ட எந்த ஒரு போதைப்பொருளும் பயன்படுத்தப்படவில்லை.

அத்துடன் இந்த இயந்திரத்தை பயன்படுத்த நிபுணர்கள் யாரும் தேவையில்லை.

கேள்விகளுக்கு சரியான பதிலைகை கொடுப்பவர்கள் சார்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி சட்ட ரீதியாக அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.