ஒவ்வாமையை தடுக்கும் கருவி கண்டுபிடிப்பு!

ஒவ்வாமையைத் தடுக்கும் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹார்வர்டு மருத்துவப் பள்ளி விஞ்ஞானிகள், ‘ஐ ஈட்’ (iEAT) என்ற சிறிய கருவியை உருவாக்கி உள்ளனர்.

இதை அவர்கள், 2,600 ரூபாய்க்கு, சந்தையில் வாங்கிய பொருட்களை வைத்தே உருவாக்கியதாக தெரியவருகிறது.

இந்த ஒவ்வாமை அறியும் கருவி, மூன்று பகுதிகளை கொண்டது. ஒரு பகுதி, உணவு மாதிரியில் உள்ள ஒவ்வாமை தரும் பொருளை சேகரிக்கிறது.

சாவி அளவுக்கே உள்ள, இரண்டாவது மின்னணு பகுதி, உணவு மாதிரியை அலசுகிறது.

மூன்றாவது, ஒரு மொபைல் செயலி. இந்த செயலி, அலசிய ஒவ்வாமை பொருட்களை பற்றி தகவலை தெரிவிக்கிறது.

இப்போதைக்கு, ‘ஐ ஈட்’ பத்தே நிமிடங்களில் நிலக்கடலை, கோதுமை, பால், முட்டை போன்ற ஐந்து உணவுகளில், ஒவ்வாமை தரும் பொருட்களை காட்டித் தருகிறது.

விரைவில், எந்த ஒவ்வாமை தரும் பொருட்களையும் கண்டு பிடிக்கும்படி, இதை தயாரிக்க இருப்பதாக, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.