ஓய்வுபெற நெஹரா முடிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா நவம்பர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு முடிவு செய்துள்ளார்.

நவம்பர் முதலாம் திகதிக்குப் பின் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த முடிவை அணி நிர்வாகத்துக்கும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கும் அறிவித்து விட்டதாக தெரியவருகிறது.

அது மட்டுமின்றி அடுத்த ஆண்டில் ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்

38 வயதான நெஹரா, 1999-ம் ஆண்டு முகமது அசாருதீனின் கேப்டன்ஷிப்பில் அறிமுகம் ஆனார். 17 டெஸ்டில் விளையாடி 44 விக்கெட்டுகளும், 120 ஒரு நாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளும், 26 இருபது ஓவர் போட்டிகளில் ஆடி 34 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

இதேவேளை இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நவம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி விட்டு ஓய்வு பெற வேண்டும் என்பதே நெஹராவின் விருப்பம் என தெரிவிக்கப்படுகிறது.