ஓவியா வெறுப்பது யாரை..??

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரது மனதில் இடம்பிடித்தவர் ஓவியா.

அண்மையில் ஓவியா அளித்த பேட்டியொன்றில்,

நீங்கள் வெறுக்கும் நபர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓவியா, நான் யாரையும் வெறுப்பதில்லை. நான் என்னை நேசிப்பதால் அனைவரையும் நேசிக்கிறேன்.

எனக்கு யாராவது துரோகம் செய்தாலோ, கொலை செய்ய வந்தால் கூட எனது கோபம் அந்த நாளைக்கு மட்டும்தான் இருக்கும். மறுநாள் புதிய நாளாக இருக்கத்தான் விரும்புவேன் என்றார்.

ஓவியா ஆர்மியை பற்றி கேட்டபோது,

ரசிகர்களின் இவ்வளவு அன்பை நான் எதிர்பார்க்கவேயில்லை. மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

ஆனாலும் எனக்கு ரசிகர்களாக இருப்பதை விட வீட்டில் ஒருவராக சகோதரியாக, மகளாக, நண்பர்களாக பார்ப்பது தான் இன்னும் அதிகம் பிடிக்கும் என்று கூறினார்.