கனடாவிலிருந்து இலங்கை வந்தவருக்கு நேர்ந்த கதி!

வவுனியா கோவில்குளம் பகுதியில் கனடாவில் இருந்து வந்த ஆணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

கனடா குடியுரிமை கொண்ட சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழிலுள்ள கோவில் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.

வவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் நேற்று (12) குறித்த நபரின் துனைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மகன் மற்றும் மருமகள் யாழில் உறவினரது மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ் சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது குறித்த நபர் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று (13) காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயல்வீட்டார் கதவினூடாக பார்த்துள்ளனர்.

அப்போது குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கனடாவிற்கு மீள செல்ல இருந்த நிலையில் இந்த துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.