சக வீரர்களுடன் சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்ட வீரர்

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நாளை மறுநாள் அறிவிக்கப்பட இருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் அணியில் டோனிக்கு கட்டாயம் இடமுண்டு. தேசிய கிரிக்கெட் அகாடமியில் வீரர்கள் தங்களது உடற்தகுதியை நிரூபித்து காட்ட வேண்டும்.

இதற்காக டோனி பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்துள்ளார். அவருடன் கேதர் ஜாதவ், சுரேஷ் ரெய்னாவும் இங்கு வந்துள்ளனர்.

இதேவேளை மூன்று ரன்கள் ஓட வேண்டிய தூரத்தை 8.90 வினாடிகளில் கடந்தேன்’ என்று இன்ஸ்டாகிராமில் பதிவு டோனி பதிவு செய்துள்ளார்.

அத்துடன் சக வீரர்களுடன் சாப்பிடும்போது எடுத்த படத்தை வெளியிட்டு ‘‘மதிய சாப்பாட்டிற்கான நேரமிது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.