சியோமியின் புதிய வெளியீடு!

சியோமி நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு திகதி உறுதி செய்யப்பட்டுள்ளது அறிந்ததே.

இந்நிலையில், மேலும் ஒரு ஸ்மார்ட்போன் இதே திகதியில் வெளியிட இருப்பதை புதிய டீசரில் சியோமி தெரியப்படுத்தியுள்ளது.

சியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 11-ம் திகதி அதாவது நாளை (திங்கட்கிழமை) அறிமுகம் செய்யப்படும் என்பதை சியோமி உத்தியோகப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

Mi நோட் 3 எனும் புதிய ஸ்மார்ட்போனும் இதே விழாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சியோமி வெளியிட்ட Mi நோட் 2 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வெளியாக இருக்கும் Mi நோட் 3 மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்களின் புதிய டீசரை சியோமி வெளியிட்டுள்ளது.

இதில் புதிய ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு தெரியவந்துள்ளது.