சியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

சியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

5.99 இன்ச் 18:9 ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 6 ஜிபி ரேம் மற்றும் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

முன்பக்கம் அழகிய செல்ஃபி மற்றும் முக அங்கீகார வசதி (face recognition) வழங்கும் 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

முற்றிலும் செராமிக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு அல்ட்ராசோனிக் பிராக்சிமிட்டி சென்சார் முன்பக்கம் மறைக்கப்பட்டுள்ளது.

சியோமி Mi மிக்ஸ் 2 சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
– 10nm ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
– அட்ரினோ 540 GPU
– 6 ஜிபி ரேம்
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 12 எம்பி சோனி IMX386 பிரைமரி கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
– 3400 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

இந்தியாவில் சியோமி Mi மிகஸ் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் Mi மிக்ஸ் 2 ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் விற்பனை ஆரம்பமாக உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.