சிவ நடிகர் இப்படி செய்யலாமா..?

உச்ச நட்சத்திரம் படத்தின் தலைப்பில் சிவ நடிகர் நடித்துள்ள படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

பெரிய நம்பர் நடிகை ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, பிரபல எடிட்டரின் மூத்த மகன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில், மலையாள நடிகர் ஒருவர் வில்லனாக நடித்துள்ளார்.

சில தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்து பல உள்ளங்களைக் கொள்ளைகொண்ட நடிகையின் கணவர் இவர். என்றாலும் இவருக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம்.

இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால், அதில் மலையாள நடிகரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் அவருக்கு மரியாதையைத் தர வேண்டாமா?

போஸ்டரில் பெயர் போட்டால் இருவருக்கும் சமமான கேரக்டராக இருக்கும் என்று மக்கள் நினைப்பார்கள் எனக்கூறி பெயரைப் போடாமல் தவிர்க்கும்படி கூறிவிட்டாராம் சிவ நடிகர்.

ஐயோ என்ன நடக்குது என்று ஒன்னுமே புரியல்ல என்கிறார்கள் பலர்.