சுஜாவைப் பற்றி ஆரவ் என்ன கூறுகிறார் தெரியுமா (வீடியோ)

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சுஜாவிடம் கமல், உங்களை ஒரு தனி அறையில் வைத்திருப்போம். நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு நடப்பதை இந்த வீட்டில் இருந்து பார்க்கலாம் என்று கூறினார்.

பிறகு மூன்று நாட்கள் கழித்து வீட்டிற்குள் செல்லலாம் என கமல் கூறினார்.

அதை தொடர்ந்து சுஜாவிற்கு பல அதிர்ச்சி காத்திருந்தது. இன்று வெளிவந்த ப்ரோமோவில் ஆரவ், சுஜா குறித்து மிகவும் மோசமாக பேசி வருகின்றார்.

இதையெல்லாம் சுஜா தனி அறை ஒன்றில் அமர்ந்து பார்த்து வருகின்றார்.

அதில் ஆரவ், வையாபுரி, ஹரிஸ் கல்யாண் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பேசிய ஹரிஸ் 10 பேர்ல இருந்து திடீர்னு 5 பேர் வந்துவிட்டது.

முதல்ல நான் போகப்போகிறேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படியே உள்டா ஆகிவிட்டது என்றார்.

அதற்கு ஆரவ் நான் கணிப்புகளை வைத்து சுஜா போவாங்கனுதான் நினைத்தேன். இங்க நடப்பதை வைத்து ஒரு கால்குலேஷன் இருக்கு என்றார்.

இதனை தொடர்ந்து அதற்கு பதிலளித்த ஹரிஸ் சுஜா அப்படி தப்ப எதுவும் பண்ணலையே? என்று கூறுகிறார்.