செவ்வாய் கிரகத்துக்கு பறக்க ரெடியாகும் ரோபோ தேனீக்கள்: நாசாவின் அதிரடித் திட்டம்!!

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இந்த ‘ரோபோ’ தேனீக்கள் இன்னும் 2 வருடங்களில் அனுப்பப்பட உள்ளதாக தெரிகிறது.

இந்த தேனீ ரோபோவில் சிறிய கேமரா, சிறிய சென்சார் என்று நிறைய வசதிகள் இருக்கும் என்றும் ஒவ்வொரு தேனீயிலும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி அங்கு பறக்க வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ‘ரோவர்’ கருவி, ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது.

இருப்பினும் அது மிக மெதுவாக நகர்ந்து ஆய்வு செய்வதாகவும், பூமிக்கு தகவல்களை அனுப்ப அதிக நேரம் எடுக்கிறது எனவும் நாசா கூறியுள்ளது.

இதற்குப் பதிலாக ‘மார்ஸ் பீஸ்’ என பெயரிட்டு ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 20 ற்கும் மேற்பட்ட ‘ரோபோ’ தேனீக்கள் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சிறிது நேரம் தான் சார்ஜ் இருக்கும். இதனால் அங்கு இதனுடன் ஒரு ரோவர் அனுப்பப்பட உள்ளது.

இதை வைத்து அனைத்து ரோபோக்களுக்கும் ‘சார்ஜ்’ செய்ய முடியும். எரி பொருள் செலவும் மிக குறைவாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.