ஜப்பான் வீரரின் அதிரடி சாதனை!!

ஜப்பான் வீரர் ஒருவர் முதன்முறையாக 100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 10 வினாடிக்குள் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

ரியோவில் நடைபெற்ற 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் டோயோ பல்கலைக்கழக மாணவரான யோஷிஹை (21 வயது)  வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இவர் இன்று ஜப்பானில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியில் கலந்து கொண்டார்.

அப்போது 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.98 வினாடிகளில் இலக்கை எட்டி சாதனைப் படைத்துள்ளார். ஜப்பான் வீரர் ஒருவர் 10 வினாடிக்குள் இலக்கை எட்டியது இதுவே முதல் முறையென்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் கோஜி இடோ என்பவர் கடந்த 1998-ம் ஆண்டு 10 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது.

2007-ம் ஆண்டு வரை இதுதான் ஆசிய சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.