ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள் யார் தெரியுமா? (படம்)

நடிகர் ஜெய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

ஜெய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நடிகை ராய் ல்க்‌ஷ்மி வெளியிட்டுள்ளார்.

விமல் – சனுசா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.

இதில் ஜெய் ஜோடியாக ராய் லக்‌ஷ்மி, வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்கின்றனர்.

காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படம் பாம்பு பற்றிய கதை என்று கூறப்படுகிறது.