டெம்பரரி பைல்களை நீக்க உதவும் சி கிளனர்

டெம்பரரி பைல்களை நீக்குவதற்கு சி கிளனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.

தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள்பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான்.

இதற்கு சி கிளனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.

இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆன்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள்.

இதனைச் சில நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாம். இதற்கென ஓரிரு நிமிடங்கள் தான் ஆகும்.

சி கிளனர் போல கிளன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன.

இவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் 3 முறை இதனைப் பயன்படுத்துவார்கள்.

டெம்பரரி பைல்களை நீக்கும்போது ரீசைக்கிள்பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.