தமிழ் மொழி பேசும் காமெரூன் மக்கள் (வீடியோ)

ஆப்பிரிக்காவின் வட மேற்குப் பகுதியிலுள்ள காமெரூன் நாட்டில் வாழும் பழங்குடியினர் பேசும் மொழி தமிழ் என்று நிரூபிக்கும் வகையில் ஆய்வில் கூறப்படுகிறது.

இவர்கள் மந்தூரா எனப்படும் மலைகளை சுற்றி வாழும் மக்களாகும்.

மந்தூரா எனப்படுவதும் ஒரு தமிழ் வார்த்தையாகும்.

இந்த மலைகள் மணல் அல்லது மண்ணினால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இதனை Sandy mountain என்ற அழைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதாவது sand அல்லது Mud என்ற வார்த்தை தமிழில் மண் என அழைப்பார்கள்.

அவர்களின் பிரதான பயிர் செய்கை சோளம் ஆகும். சோளம் என்பது ஒரு தமிழ் வார்த்தையாகும்.

அவர்கள் கறுப்பு எறும்புகளை மல்லுகொட்டே என்று அழைக்கின்றார்கள். மால் என்றால் கறுப்பு என்று பொருள்படுகிறது.

கொட்டி என்ற தமிழ் வார்த்தை இங்கே கொட்டே என்று மாறியது என்று கூறப்படுகிறது.

கொட்டெறும்பு என்பதனை தமிழர்கள் கட்டெறும்பு என்று அழைப்பார்கள்.

இவ்வாறான பல தமிழ் சொற்களை காமெரூன் நாட்டு மக்கள் பயன்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது.