தற்கொலைகளை தடுக்க களத்தில் இறங்கும் பேஸ்புக்!

தற்கொலைகளை தடுக்க புதிய அம்சத்தை வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த புதிய அம்சத்தினை வழங்கவுள்ளதாக தெரியவருகிறது.

பேஸ்புக் பதிவு அல்லது அலிவ் வீடியோ உள்ளிட்டவையில் தற்கொலை சார்ந்த கருத்துக்களை ஒருவர் பயன்படுத்தும்போது பேடெர்ன் அங்கீகாரம் எனும் வழிமுறையை பயன்படுத்தி பேஸ்புக் கண்டறியும்.

இந்த அம்சம் ஐரோப்பிய யூனியன் தவிர உலகின் மற்ற பகுதிகளில் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பேஸ்புக் தயாரிப்பு மேலாண்மை பிரிவு துணை தலைவர் கை ரோசென் கூறியதாவது:-

செப்டம்பர் மாதத்தில் ஆன்லைன் சவால்கள், சுய தீங்கு, தற்கொலை போன்ற சம்பவங்களை ஆதரிக்கும் வார்த்தைகள், ஹேஷ்டேக் மற்றும் குரூப் பெயர்களை தற்கொலை தடுப்பு நிறுவனங்களுடன் இணைந்து சேகரிக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக் சேவையை பாதுகாப்பான சமூகமாக உருவாக்கும் பணிகளின் ஒரு அங்கமாக இது திகழும்.

பேஸ்புக் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களில் யாரேனும் மன் சோர்வில் இருக்கும்போது அவருக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குபவருடன் இணைக்க பேஸ்புக் உதவி செய்து வருகிறது என்றார்.