தாய் இறந்தது அறியாமல், தாயின் உடல் அருகே உறங்கிய மகன்!

ஹைதராபாத்தில் தாய் உயிரிழந்தது தெரியாமல், அவரது உடல் அருகிலேயே 5 வயது சிறுவன் உறங்கிய காட்சி பார்ப்பவர் மனதை கரைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமீனா சுல்தானா என்ற கட்டிடத் தொழிலாளி, உடல் நலக்குறைவு காரணமாக உஸ்மானியா மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவருடன் 5 வயது மகனும் சென்றிருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதே, சமீனா சுல்தானாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடலை கட்டிலிலேயே கிடத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், தன் தாய் உயிரிழந்ததை அறியாத அவரது மகன், அவரது உடல் அருகிலேயே படுத்து உறங்கியுள்ளான்.

இந்த காட்சி பார்ப்பவர் மனதைக் கரைத்துள்ளது.