திருடப்பட்டது அவுஸ்திரேலியப் பாதுகாப்பு திட்டங்கள்!!

அவுஸ்திரேலியப் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் பெரியளவில் நடைபெற்ற கணினி ஊடுருவல் ஒன்றில் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அரசாங்க ஒப்பந்ததாரர் வசமிருந்த சுமார் 30 ஜிபி அளவிலான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், புதிய போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் குறித்த தகவல்களும் அடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகியள்ளன.

இதேவேளை தகவல் திருட்டு தொடர்பில் பிற நாடுகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது அவுஸ்திரேலிய அரசாங்கம் அறியமுடியவில்லையெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணினியில் ஊடுருவிய மர்ம நபருக்கு அவுஸ்திரேலிய கணினி பாதுகாப்பு அதிகாரிகள் ‘ஆல்ஃப்’ என்று பெயரிட்டுள்ளனர்.

கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த கணினி ஊடுருவல் தொடங்கியுள்ளது.

ஆனால், நவம்பர் மாதம்வரை கணினி ஊடுருவல் குறித்து அவுஸ்திரேலியாவின் சமிக்ஞைகள் இயக்குநரகம் எச்சரிக்கை செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவல் திருட்டினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று தனக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தொழில் அமைச்சர் கிரிஸ்டோஃபர் பைன் மேலும் தெரிவித்துள்ளார்.