திவாகரன் – தினகரன் இடையே பனிப்போர் குறித்து கலந்துரையாடிய சசிகலா!!

பரோலில் சசிகலா வெளியே வந்தபோது, தி.நகர் வீட்டில் விசேஷ பூஜை ஒன்று நடத்தப்பட்டதாக தெரிகிறது.

உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக 5 நாட்கள் பரோலில் சசிகலா வெளிவந்தார்.

இந்நிலையில் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே அவர் அதிக நேரம் செலவு செய்துள்ளதாகவும், அப்போது, திவாகரனுக்கும், தினகரனுக்கும் இடையே உள்ள பனிப்போர் குறித்து பேசப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.