தூக்கம் வரவில்லையென்று புலம்புவர்களே இதைப் படியுங்க!!

உறக்கமின்றி தவிப்பவர்களுக்கும், உறக்கத்தின் போது அசௌகரியங்களை உணர்பவர்களுக்கும் ஆறுதல் தரக்கூடிய Luuna எனப்படும் மாஸ்க் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த Luuna மாஸ்க் ஆனது Intelligent Sleep Mask என அழைக்கப்படுகின்றது.

முகத்தில் கண்களிற்கு நேரே அணியக்கூடியதாக இருக்கும் இந்த மாஸ்க் ஆனது மூளையின் சமிக்ஞைகளை ஒத்திசைவாக்கம் செய்வதன் ஊடாக நிம்மதியானதும், ஆரோக்கியமானதுமான உறக்கத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

எதிர்வரும் ஜுன் மாதம் முதல் இதனைக் கொள்வனவு செய்துகொள்ள முடியுமாம்.

அத்துடன் இதன் விலையானது 56 பவுண்ட்ஸ்கள் என கூறப்படுகிறது.