நடிகை லேகாவுக்கு டும் டும் டும்..!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை லேகா வாசிங்டன் அவரது காதலரான பத்திரிகையாளரை மணக்கிறார்.

லேகா வாஷிங்டன், மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் பல்லோ கட்டர்ஜியை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லேகா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பப்லோ சட்டர்ஜி இந்து மதத்தைச் சேர்ந்தவர்.

மும்பையில் இவர்கள் திருமணம் பொதுவான முறைப்படி நடக்கிறது. திருமணம் நடைபெறும் அன்றே வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.