நிறவெறி விமர்சனங்களை சந்தித்தேன்- உஸ்மான்

நிறவெறி விமர்சனங்களை சந்தித்ததாக பாகிஸ்தானில் பிறந்து அவுஸ்திரேலிய நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் உஸ்மான் கவாஜா பிளேயர்ஸ் தெரிவித்துள்ளார்.

சிட்னியில் இளம் வீரராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் நிறவெறித்தனமான இழிவுபடுத்தல்களை சந்தித்துள்ளேன்.

சில வசைகளை வெளியில் சொல்ல முடியாது. அவை இன்னும் கூட என்னை காயப்படுத்துகின்றன.

அதனை நான் வெளிக்காட்டி கொள்ளமாட்டேன். நான் ரன்கள் அடிக்கும் போதெல்லாம் நிறவெறி வசையை வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.

இந்த நிறவெறி போக்கு தான் அவுஸ்திரேலியாவில் பிறக்காத என்னுடைய நண்பர்கள் பலர் விளையாட்டில் அவுஸ்திரேலிய அணியை ஆதரிக்காததற்கு காரணமாகும்.

நானும் கூட அப்படி தான் இருந்தேன். கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய அணி தேர்வில் நிறவெறியும், அரசியலும் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது என்றார்.