நெல்லியடியில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் இரண்டு இளைஞர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலக்க தகடுகள் இல்லாத உந்துருளியில் வருகைத் தந்த இருவர் நேற்று (15) இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மந்துவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.