பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் மர்ம நபர் யார்? (வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அந்த நிகழ்ச்சி தொடர்பான ஒரு புரோமோ வீடியோ இன்று (வெள்ளிக்கிழமை)  காலை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கையில் சாக்கு பையுடன் ஒரு மர்ம நபர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். நான் யார் என அவர் யாரிடம் கூறாமல், எல்லோரிடம் சென்று பேசுகிறார்.

இதைக் கண்டு, பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

அதன்பிறகு அவர் கெமரா முன்பு சென்று பிக்பாஸிடம் ஏதோ முறையிடுகிறார்.

இது ஒருபுறம் இருக்க,  ஓவியா சென்ற பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துவிட்டதாக கூறிவருகின்றனர்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இது போன்ற ஒரு விளையாட்டில் தொலைக்காட்சி நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.