பிரதமர் பதவிக்கு தகுதியானவர் நான் தான்!!

பிரதமர் பதவிக்கு தான் தகுதியானவர் என சுற்றுலா மற்றும் கிறிஸ்துவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக உள்ள சிரேஷ்ட அமைச்சர் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வத்தளை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக அதிக ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 2வது நபர் தான் என்றும்ர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிரதமர் பதவியைக் கேட்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்,