பிரபல திரைப்பட இசையமைப்பாளர் மரணம்!!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் உடல் நலகுறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார்.

இவர் ‘அமரன்’, ‘சீவலபேரி பாண்டி’, ‘மாமன் மகள்’, ‘அருவாவேலு’, ‘வணணக் கனவுகள்’, ‘சூப்பர் குடும்பம்‘, ‘அசுரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இவற்றில் பெரும்பாலான பாடல்கள் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தவிர தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.

ஆதித்யன் குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசித்து வந்தநிலையில் சமீபத்தில் அவருக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டது.

இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஆதித்யன் காலமானார். அவருக்கு வயது 64.

இசை அமைப்பாளர் ஆதித்யன் மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.