மன்னாரில் ஆரம்ப பாடசாலை கட்டிடம் இம்மாத இறுதியில் திறப்பு!!

மன்னார் தேவன்பிட்டி ஆரம்பப் பாடசாலையின் புதிய கட்டிடம் அமைக்கும் வேலைகள் நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது.

இந்த ஆரம்ப பாடசாலையானது ஜப்பான் வாழ் மக்களின் நிதி உதவியுடன் UN HABITAD, நிறுவன அனுசரணையில் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடமானது ரூபாய் 26.7 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஆரம்ப பாடசாலையின் புதிய கட்டிடத்தின் வேலைகள் பூர்த்தியாகி, இந்த மாத இறுதியில் திறப்பு விழா நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழருவிக்காக முகமாலை நாதன்