மன்னிப்பு கேட்கும் ஆப்பிள் நிறுவனம்!-

புதிய ஐபோன்கள் வாங்குவதை தூண்டுவதற்காக, பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததை ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம் பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

மேலும், குறைந்த விலைக்கு பழைய ஐபோன்களின் பேட்டரிகளை மாற்றித் தருவதாகவும், ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது

2018ல் வாடிக்கையாளர்கள் தங்கள் ஐபோன்களின் பேட்டரி திறனை அறிந்துக் கொள்ளும் வகையில் மென்பொருள் வசதி ஒன்றை அளிப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.