மரத்தில் ஏறி உண்ணாவிரத போராட்டம்

நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு இடமளிக்க மாட்டேன் எனக்கூறி நபர் ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நான் வளர்த்த மரங்களை அரசாங்கம் வெட்டுவதற்கு இடமளியேன்” எனக் கோரி குறித்த நபர் மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வட்டகொடை, மடக்கும்புர வேவஹென்ன கிராமத்தைச் சேர்ந்த எம்.ஜி.பந்துல பண்டார என்பவரே போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

இதுகுறித்து போராட்டத்தை முன்னெடுத்தவர் கூறியதாவது;

எனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு கடந்த வருடம் ஒக்டோம்பர் மாதம் 12000 – 15000 ரூபாய் வரையிலான தொகையை அரசாங்கத்திற்கு செலுத்தி, அரசாங்க செயலக பிரிவில் அனுமதிகளை பெற்றிருந்த பெற்றிருந்தேன்.

அதனை அரச சொத்தாக அபகரிக்க திட்டம் தீட்டுகின்றார்கள். நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உள்ளது.

இதன் மூலமாக எனது 5 பிள்ளைகளுடைய கல்வி மற்றும் பொருளாதாரம் அடங்கியுள்ளது.

இதனால் எனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும்.

அனுமதி வழங்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.