மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வி!-

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறினார்.

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடைபெற்று வருகிறது.

மகளிர் ஒற்றையர் போட்டியின் முதல் சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவாவும், ரொமானியாவின் மோனிகா நிகுலெஸ்குவும் மோதினர்.

ஆட்டத்தின் முதலில் இருந்தே ஷரபோவா சிறப்பாக விளையாடினார். இதனால் முதல் சுற்றில் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதையடுத்து, இரண்டாம் சுற்றில் மோனிகா நிகுலெஸ்கு அற்புதமாக விளையாடி ஷரபோவாவுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். இதனால் இரண்டாவது சுற்றை மோனிகா 4-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்று நடந்தது. இதில் 3-6 என்ற கணக்கில் முன்றாவது சுற்றையும் கைப்பற்றினார்.

இறுதியில், மோனிகா நிகுலெஸ்கு 4-6 6-4 6-3 என்ற கணக்கில் மரியா ஷ்ரபோவாவை வீழ்த்தினார்.