மாளவிகாவின் குடும்பம் இதுதான் (வைரலாகும் புகைப்படங்கள்)

உன்னைத்தேடி, திருட்டுப்பயலே படங்களில் நடித்த மாளவிகா தற்போது தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா.

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் கார்த்திக், அஜித், முரளி போன்ற பிரபல நாயகர்களுடன் நடித்தார்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம் பெற்ற ‘வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்…’ பாடல் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது.

2007-ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டபின் திருமணத்துக்குப்பிறகும் நடிப்பேன் என்றார். பின்னர் ஒரு சில படங்களில் தலைகாட்டினார்.

தற்போது 38 வயதாகும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

கணவருடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். நடிப்பதை நிறுத்தி விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் மாளவிகா தனது கணவர், குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.