யானைக்கு மரண தண்டனை!!

யானைக்கு பீகார் அரசு மரணதண்டனை விதித்துள்ளது.

25 வயதுடைய யானை ஒன்று 15 பேரை கொன்றதால் அதனை சுட்டுக்கொல்லுமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த யானை தனிப்பட்டு போனதால் மதம் பிடித்துள்ளது. இதனால், வனப்பகுதியில் வசித்து வந்த 4 பேரை மிதித்து கொன்றுள்ளது.

அத்தோடு ஜாகர்கண்ட் வனத்தில் வசித்து வந்த 11 பேரை யானை தாக்கி கொன்றுள்ளது.

இவ்வாறு 15 பேரை கொன்றுவிட்டு வனத்தில் திரிந்து வரும் யானையை பிடிக்க வன உயர் அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

ஆனால், அவர்களது முயற்சிகள் பல வீணாய் போனது.

இதனால் வேறுவழியின்றி யானையை சுட்டு கொன்றுவிடுமாறு அரசு உத்தரவு பிறபித்துள்ளது.