யாழின் கில்லாடியாக மகுடம் சூடியது பாடும்மீன் விளையாட்டு கழகம்

யாழின் கில்லாடியாக குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழகம் மகுடம் சூடியது.

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்பட்ட யாழின் கில்லாடி இறுதியாட்டத்தில் பாடும்மீன்கள் வி.க மற்றும் ஞானமுருகன் வி.க அணிகள் மோதின.

பரபரப்பான ஆட்டத்தில் ஆட்ட நேரமுடிவில் பாடும்மீன்கள் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று கில்லாடியின் இரண்டாம் வருவகால தொடர் கிண்ணத்தையும் கைப்பற்றியது.

இன்றைய போட்டியில் சிறப்பான நுட்பமான ஒரு ஆட்டத்தை பாடும் மீன் அணி ஆடியது.

இதேவேளை இன்றைய போட்டியின் கோலினை பதிவு செய்த குட்டியும் சிறந்தகோல் காப்பாளராக பீரதீபனும் தெரிவு செய்யபட்டுள்ளனர்.