யாழில் சாதனை படைத்த 54 வயதுடைய நபர்!

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் வசித்து வருபவருமான 54 வயதுடைய செல்லையா திருச்செல்வம்  என்பவர் சாதனை படைத்துள்ளார்.

இவர், ஹயஸ் வாகனம் ஒன்றில் கட்டப்பட்ட கயிற்றை தனது தலைமுடியுடன் இணைத்துக் கட்டி ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை ஹயஸ் வாகனத்தை இழுத்துச் சென்றுள்ளார்.

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்திற்கருகில் பலாலி பிரதான வீதியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.