ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓவியா (படம்)

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

அதற்கு காரணம் அவரின் ஆக்டிவிடிஸ்தான் முக்கிய காரணம் என அனைவரும் அறிந்ததே. ட்விட்டரில் ஓவியா ஆர்மியை உருவாக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அவ்வப்போது நடிகை ஓவியா தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அந்த வீட்டு குழந்தையை தூக்கி அவர் கொஞ்சும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.