லலித் மோடி பதவி விலகல்!

நாகவுர் மாவட்ட கிரிக்கட் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது;

15 ஆண்டுகளுக்கு மேலாக எனது கிரிக்கட் வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியையும் மகிழ்ச்சியாக அனுபவித்துள்ளேன்.

ஆனால் அடுத்த தலைமுறையினருக்கான பாதையை உருவாக்க வேண்டும். எனவே இன்றிலிருந்து கிரிக்கட் நிர்வாகத்திலிருந்து விடைபெறுகின்றேன்.

என்னுடைய கிரிக்கட் இரசிகர்களுக்கு நன்றி சொல்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.