விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச் சூடு: படையினர் குவிப்பு

விசேட அதிரடிப்படை மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு – குரண பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிரடிப் படையினர் பயணித்த ஜீப் வண்டி குரண பிரதேசத்தைக் கடந்து செல்ல முற்பட்ட நிலையில் வான் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்கள் அதிரடிப்படை வாகனம் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட குழுவில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.