விஞ்ஞானிகளின் அதிரடி தகவல்

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் ஏற்பட்ட வெப்பநிலையால் சுமார் 3,500இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலை நீடித்தால் 2100ஆம் ஆண்டில் உயிர்வாழ்வது சிரமம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பூமியில் நிலவும் வெப்ப நிலையை ஈரப்பதம் சேர்ந்தது மற்றும் சேராதது என விஞ்ஞானிகள் பிரிக்கின்றனர்.

இதில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை ஆவியாக்கிய பிறகு கிடைக்கும் குறைந்தபட்ச வெப்பநிலை, ஈரப்பதம் சேர்ந்த வெப்பநிலையாக அறியப்படுகிறது.

இந்த வெப்பநிலை, 2100ஆம் ஆண்டுவாக்கில் 35 டிகிரி செல்சியசாக அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.