வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட அதிபர் முதல் தடவையாக பொது நிகழ்வில் பங்கேற்பு!!

ஜிம்பாப்வே நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றிய பின்னர் முதன்முறையாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று ராபர்ட் முகாபே பங்கேற்றார்.

ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் அதிபரான ராபர்ட் முகாபே(93) கடந்த 37 ஆண்டுகளாக இந்த பதவியில் நீடித்து வந்தார்.

இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் ஜிம்பாப்வேயில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது.

இதனையடுத்து அதிபர் ராபர்ட் முகாபே கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, முகாபேவுக்கும் ராணுவத்துக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தையில் மூத்த கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் அண்டை நாடான தென் ஆப்பிரிக்காவின் தூதர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரம் பறிக்கப்பட்ட ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார்.

அவரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்கிய மந்திரிகள், உயரதிகாரிகள் கைதாவார்கள் என தெரியவந்துள்ளது.