வீழ்த்தும் விழிகள்

தடை செய்யப்பட்ட
ஆயுதங்களின் வரிசையில்
உன் கண்களைச் சேர்க்க வேண்டும்.

நீ என்னை பார்க்கும் போது,
விரைந்து வந்து
என்னை வீழ்த்துகிறது உன் விழிகள்

உலகத்தின்
ஒரு நுனியில்
சிறு துளியாய் நான்
வீழ்ந்ததன் முழு நோக்கம்
நீயாகத் தான் இருப்பாய் !

-ராகுலன்-
டென்மார்க்