வேல்ஸில் மண்சரிவு ஏற்படும் அபாயம்!!

தென் மேற்கு வேல்ஸின் இஸ்டலிஃபேரா (Ystalafera) எனும் பகுதியில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அங்குள்ள பொதுமக்கள் வேறு பகுதிகளுக்கு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 10 குடும்பங்கள் குறித்த பகுதியை விட்டு நேற்று (11) உடனடியாக வெளியேறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.