14-03-2018 இன்றைய ராசிபலன்கள்

ஹேவிளம்பி வருடம், மாசி மாதம் 30ம் திகதி, ஜமாதுல் ஆகிர் 25ம் திகதி, 14.3.2018 புதன்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி மாலை 4:49 வரை;

அதன் பின் திரயோதசி திதி, திருவோணம் நட்சத்திரம் மதியம் 3:44 வரை; அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00-1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30-9:00 மணி
* குளிகை : காலை 10:30-12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
பொது : காரடையான் நோன்பு, பிரதோஷம், நந்தீஸ்வரர் வழிபாடு.

மேஷம்:
மனதில் பலநாள் இருந்த கவலை நீங்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் பணி மேற்கொள்வீர்கள்.

பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர் வருகையால் மகிழ்ச்சி வளரும்.

ரிஷபம்:
மாறுபட்ட சூழ்நிலையை சந்திக்க நேரிடலாம். நிதானமாக செயல்படுவது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராக திகழ்வர். இஷ்ட தெய்வ வழிபாடு மன அமைதியை தரும்.

மிதுனம்:
எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஆகலாம்.சிறிய பணி கூட அதிக சுமை போல தோன்றும்.தொழில், வியாபாரம் சிறக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும்.

லாபம் சுமார். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.

கடகம்:
மனதில் நல்லெண்ணம் அதிகரிக்கும். நற்செயல் புரிந்து சமூகத்தில் வரவேற்பு பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான அனுகூலம் உண்டாகும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

சிம்மம்:
பேச்சு, செயல்களில் திறமை வெளிப்படும். அலைச்சல் தந்த வேலை ஆதாயம் தருவதாக மாறும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும்.பெற்றோரின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

கன்னி:
சிலர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் அணுகுவர். முன்யோசனையுடன் அவர்களிடம் விலகுவது நல்லது .தொழில், வியாபாரத்தில் மிதமான பணவரவு கிடைக்கும்.பெண்களுக்கு பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். அரசுவகையில் நன்மை ஏற்படலாம்.

துலாம்:
முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம் .சுயதேவை ஓரளவு பூர்த்தியாகும் தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமங்களை உடனடியாக சரி செய்வது நல்லது. சுமாரான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்:
இஷ்ட தெய்வ அருளால் நன்மை உருவாகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் வகையில் அதிகரிக்கும். நிலுவை பணம் வசூலாகும். மனைவி விரும்பி கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். நண்பருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

தனுசு:
வேண்டாத நபர் ஒருவரை பொது இடத்தில் சந்திக்க நேரிடலாம். எண்ணத்திலும், பேச்சிலும் கட்டுப்பாடு அவசியம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பெண்களுக்கு வீட்டில் திடீர்ச்செலவு ஏற்படலாம். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்:
உங்களின் செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும்.அரசு தொடர்பான உதவி பெற அனுகூலம் உண்டு. தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி நிறைவேறும்.ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.

கும்பம்:
சிலரது பேச்சு சங்கடம் ஏற்படுத்தலாம். கூடுதல் வேலை பளு ஏற்படலாம்.தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது. பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும் .உணவு விஷயத்தில் கவனம் தேவை.

மீனம்:
துவங்குகிற பணி முழு அளவில் வெற்றி பெறும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். பணவரவு அதிகரிக்கும் .குடும்பத்தேவை தாராள செலவில் நிறைவேறும். பழைய நண்பரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படும்.