கன்வெர்டிபிள் லேப்டாப்கள் பெர்லின் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

லெனோவோ நிறுவனத்தின் யோகா கன்வெர்டிபிள் லேப்டாப்கள் பெர்லின் நகரில் நடைபெறும் IFA 2017 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

லெனோவோ நிறுவனம் புதிய யோகா கன்வெர்டிபிள் லேப்டாப்கள் மற்றும் Miix 520 விண்டோஸ் 2 இன் 1 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யோகா 920 லேப்டாப்பில் கார்டனா வசதி கொண்டுள்ளது. இதனால் நான்கு மீட்டர் தொலைவில் இருந்தும் வாய்ஸ் கமாண்டுகளை புரிந்து கொள்ள முடியும்.

இந்த லேப்டாப்பில் நியர் எட்ஜ்-லெஸ் டிஸ்ப்ளே, மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு, 360 கோணத்தில் வாட்ச்பேண்ட், விண்டோஸ் ஹல்லோ கொண்டு கைரேகை மூலம் லாக்-இன் செய்யும் வசதி, கான்ஸ்டண்ட் கனெக்ட் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

லேப்டாப், ஸ்டான்டு, டென்ட் மற்றும் டேப்லெட் என நான்கு மோட்களில் யோகா 920 லேப்டாப் பயன்படுத்த முடியும்.